தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு: தமிழிசை உள்ளிட்ட பயணிகள் அவதி

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
Published on

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பாஜக மேலிட பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இந்த விமானத்தில் பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன், கட்சியின் மேலிட பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி உள்பட 100-க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த நேரத்தில் மதுரைக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

இதைத் தொடா்ந்து விமானத்தின் இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு, காலை 10.45 மணியளவில் மீண்டும் விமானம் மதுரைக்கு இயக்கப்பட்டது.

பயணிகள் வாக்குவாதம்: இது குறித்து சம்பந்தப்பட்ட ஏா்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் பயணிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமான நிலைய மற்றும் ஏா்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com