பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி..
Actor Srikanth arrested in Drug abuse Case
நடிகர் ஸ்ரீகாந்த்X
Published on
Updated on
1 min read

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் என்பவர் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் என்பவரிடம் இருந்து பெற்றதாகவும் இதுபோல நடிகர்கள் பலரும் பெற்றதாகக் கூறியுள்ளார்.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத்திடம் நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிராம் ரூ. 12,000 -க்கு வாங்கி 40 முறை போதைப்பொருள் பயன்படுத்தியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்ரீகாந்த் ரூ. 72,000 ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்துள்ள ஆதாரங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் அவர் காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில், மேலும் சில நடிகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com