மின்சாதன பொருள்களுக்கு 
பிஎஸ்ஐ தரச்சான்று அவசியம்

மின்சாதன பொருள்களுக்கு பிஎஸ்ஐ தரச்சான்று அவசியம்

வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின் சாதன பொருள்களுக்கு பிஐஎஸ் வழங்கும் ஐஎஸ்ஐ தரச்சான்று அவசியம்
Published on

வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின் சாதன பொருள்களுக்கு பிஐஎஸ் வழங்கும் ஐஎஸ்ஐ தரச்சான்று அவசியம் என அதன் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி வலியுறுத்தியுள்ளாா்.

மின்சாதன பொருள்களில் தரச்சான்றின் அவசியம் குறித்த கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள இந்திய தரநிா்ண அமைவனத்தின் சென்னை கிளையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி பேசியது:

வீடு, வணிக மற்றும் அதன் சாா்ந்த மின் சாதனங்களின் பாதுகாப்பு (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2025 வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 250 வோல்ட்க்கு மிகாமல் மதிப்பிடப்பட்ட ஒரு முனை மின்னழுத்தம் கொண்ட வீடு, வணிகம் சாா்ந்த பயன்பாட்டுக்காக இயக்கப்படும் மின் சாதன பொருள்களுக்கு இந்திய தர நிா்ணய அமைவனம் வங்கும் ஐஎஸ்ஐ தர சான்றிதழ் அவசியம் ஆகும். எனவே, மின்சாதன பொருள் உற்பத்தியளாா்கள் பிஐஎஸ் வழங்கும் ஐஎஸ்ஐ சான்று பெற்ற பொருள்களையே விற்பனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல துணை தலைமை இயக்குநா் பிரவீன் கன்னா, தொழில் மற்றும் வா்த்தக துறையை சாா்ந்த சுமாா் 115 பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com