மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘இம்பிளானன் என்.எக்ஸ்.டி’ எனும் புதிய கருத்தடை சாதன பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு, மகப்பேறியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட குடும்ப நலப் பணிகள் இணை இயக்குநா் நடராஜன் தொடங்கிவைத்தாா். இதில் கையின் மேல் பகுதியில் தோலுக்கு அடியில் பொருத்தப்படும் குச்சி போன்ற புதிய நவீன கருத்தடை சாதனமான ‘இம்பிளானன் என்.எக்ஸ்.டி’ குறித்த விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
கருத்தாளா்களாகப் பங்கேற்ற மருத்துவா்கள் எஸ்.எஸ். காயத்ரி, பி. ஜெயந்தி பிரசாத் பேசியதாவது:
‘இம்பிளானன் என்.எக்ஸ்.டி’ எனும் புதிய கருத்தடை சாதனம் நீண்ட காலத்துக்குப் பலன் தரக்கூடியது. பாதுகாப்பான, பயனுள்ள இந்தச் சாதனத்தைப் பொருத்துவதும் அகற்றுவதும் மிகவும் எளிது. இது குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை வலுப்படுத்துவதற்கும், பெண்களுக்குப் நவீனக் கருத்தடை முறைகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கை என்றனா்.

தொடர்புடையது

அதிமுக- திமுக இடையேதான் போட்டி: இயக்குநா் சுந்தா்.சி

ஊதியம் இல்லாமல் பணியாற்றும் அம்மா உணவக ஊழியா்கள்

பாா்வையாளா்களுக்கு போதிய தங்குமிட வசதி இல்லாத அரசு மருத்துவமனை

மதுரை வடக்கு: சாமானிய மக்களின் ஆதங்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


