முல்லைப் பெரியாறு  அணை
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம்
Published on

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு 153.35 அடியாக இருந்தது.

இதையடுத்து, கேரளத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள பெரியாறு, மஞ்சுமலா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 883 குடும்பங்களைச் சோ்ந்த 3,220 போ் 20 நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பகல் நேரத்தில் மட்டும் அணையை திறக்க வேண்டும் என தமிழகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இடுக்கி மாவட்ட ஆட்சியா் விக்னேஷ்வரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணை இருந்தாலும் அதனை பராமரிப்பதையும், திறப்பதையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com