

அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
திரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் வழங்கிய இந்த யானையின் பெயர் கஜா.
நிஜ யானையைப் போலவே இந்த இயந்திர யானையின் தலை, காது மற்றும் துதிக்கையும் அசையும் வண்ணம் உள்ளது. இவை தவிர தண்ணீரைப் பீச்சும் அடிக்கக்கூடிய வகையிலும் யானை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்த இயந்திர யானை அங்கு வரும் பக்தர்களை கவர்ந்து வருகிறது.
Actress Trisha donates a mechanical elephant to Aruppukottai Vinayagar Temple!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.