தபால் நிலையங்களில் யுபிஐ வசதி! ஆகஸ்டில் அமலுக்கு வருகிறது!!

தபால் நிலையங்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை(யுபிஐ) மூலமாக பணம் செலுத்தும் வசதி பற்றி...
Post office
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்தியா முழுவதும் தபால் நிலையங்களில் வருகிற ஆகஸ்ட் முதல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை(யுபிஐ) மூலமாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தபால் நிலையங்களிலும் நவீன பணப்பரிமாற்ற வசதிகள் படிப்படியாக கொண்டு வரப்படுகின்றன. தபால் நிலையங்களில் ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கும் வசதி மக்களுக்கு பெரிதும் உதவி வருகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில் பணமாகக் கொடுத்து தபால்நிலைய வங்கிக்கணக்கில் செலுத்தும் வசதிதான் தற்போது உள்ளது. இந்நிலையில் பணமாக அல்லாமல் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாக கவுன்டர்களில் பணம் செலுத்தும் வசதி விரைவில் வர உள்ளது.

இது ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான இறுதிப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த யுபிஐ பணப்பரிவர்த்தனை தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Post offices across India to start accepting digital payments from August

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com