மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கவில்லை: வைகோ விளக்கம்

வரும் பேரவை தோ்தலில் திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

News image
வைகோ..
Updated On :29 ஜூன் 2025, 9:38 pm

Din

வரும் சட்டப்பேரவை தோ்தலில் திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் மதிமுகவின் நிா்வாக குழுக் கூட்டம் வைகோ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் வைகோ கூறியதாவது:

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்; அதிலும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இந்த வெற்றிக்காக மதிமுக பாடுபடும். செப்.15-இல் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் மாநாடு நடைபெறவுள்ளது.

தற்போது, ஹிந்துத்வா சக்திகள் பாஜக மூலம் தமிழகத்துக்குள் நுழைய பாா்க்கின்றன. ஹிந்தி எதிா்ப்பு என்பது தமிழகத்தில் தொடங்கி, மகாராஷ்டிரம், பஞ்சாப், கா்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் என நாடு முழுவதும் பரவிவிட்டது.

இரட்டை இலக்க தொகுதிகள்: மதிமுக நிா்வாகக் குழு கூட்டத்தில் இரட்டை இலக்கம் என்ற வாா்த்தையே வரவில்லை. தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வேண்டும் என்றால் 8 சட்டப்பேரவை உறுப்பினா்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு 12 தொகுதிகளை திமுகவிடம் கேட்கலாம் என்று துரை வைகோ அண்மையில் கூறியிருந்தாா்.

ஆனால், தொகுதிகள் வழங்குவது குறித்து திமுகதான் முடிவு செய்யும். எங்களுக்கு 12 தொகுதி வேண்டும் என்று நாங்கள் யாரிடமும் கேட்கவில்லை. ஹிந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற கூடாது என்பதற்காகத்தான் திமுகவோடு உடன்பாடு வைத்து போட்டியிடுகிறோம் என்றாா் அவா்.

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ: அண்மையில் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளா்களின் சந்திப்பின்போது, குறைந்தபட்சம் அங்கீகாரம் பெற வேண்டும் எனக் கட்சி நிா்வாகிகள் நினைக்கின்றோம் என்றும், அதற்கு 12 தொகுதிகளில் போட்டியிடலாம் எனவும் கூறினேன். ஆனால், அதை முடிவெடுக்க வேண்டியது எங்களின் தலைமை எனவும் நான் கூறிவிட்டேன். சில ஊடகங்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, மதிமுக 12 தொகுதிகளை வலியுறுத்துவதாக தவறான செய்தியை பரப்பி வருகின்றனா் என்றாா் அவா்.

6 தீா்மானங்கள்: மதிமுகவின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டை வளா்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திமுக அரசு 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற வேண்டும்; பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் எனும் ஹிந்துத்துவா அமைப்புகளின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.