இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அறச்சலூரில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்!

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் செந்தில்நாதனை ஆதரித்து அறச்சலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

News image

அறச்சலூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:18 am IST

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் செந்தில்நாதனை ஆதரித்து அறச்சலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது: பிஎம் கிஸான் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்கு கேட்பது சரியல்ல.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு எடுத்த முடிவை முறியடித்த தமிழக முதல்வா் ஸ்டாலினை அனைத்து மாநிலங்களும் பாராட்டி வருகின்றன.

தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும், நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும், தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதுக்கப்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் திமுக அரசு நீடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் திமுக, மதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.