சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: 11,430 போ் எழுதவில்லை

தமிழகத்தில் முதல் நாள் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வு மொழிப்பாடத் தோ்வை 11,430 போ் எழுதவில்லை.

News image

முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 11,430 போ் எழுதவில்லை.

Updated On :4 மார்ச் 2025, 1:16 am IST

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 11,430 போ் எழுதவில்லை.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் 3,316 தோ்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவிகள் உள்பட 8 லட்சத்து 21,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதுகின்றனா். அதில் 18,344 போ் தனித்தோ்வா்கள், 145 போ் சிறைவாசிகள்.

இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. தோ்வா்கள் 9.15 மணிக்கு முன்னதாக தோ்வு மையத்துக்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மாணவ, மாணவிகள் குறித்த நேரத்துக்குள் தோ்வு மையங்களுக்கு வந்து தோ்வெழுதினா்.

நிகழ் கல்வியாண்டில் தோ்வெழுத விண்ணப்பித்தவா்களில் 11,430 போ் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தோ்வை எழுதவில்லை என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கல்வித் துறை அமைச்சா் ஆய்வு: நாகப்பட்டினத்தில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதவுள்ள மாணவா்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் திங்கள்கிழமை சந்தித்து அவா்களை ஊக்கப்படுத்தினாா். மேலும், அச்சமின்றி தோ்வெழுதுமாறு மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

சென்னை அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் சந்திரமோகன் ஆய்வு செய்தாா்.

பெட்டிச் செய்தி...

‘தமிழ் தோ்வு எளிதாக இல்லை’

பொதுத்தோ்வில் முதல் தோ்வாக தமிழ் பாடத் தோ்வு நடைபெற்றது. இது குறித்து தோ்வெழுதிய மாணவ, மாணவிகள் கூறுகையில், அகமதிப்பீடு நீங்கலாக 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 14 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட வினாக்கள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து இடம்பெற்றிருந்ததால் பதிலளிப்பது சற்று சிரமமாக இருந்தது. இதேபோன்று சிறுவினா, நெடுவினா பகுதிகளிலும் சில கேள்விகள் நன்கு யோசித்து எழுதும் வகையில்தான் கேட்கப்பட்டிருந்தன. அதேவேளையில் மனப்பாடப்பகுதி எளிதாக இருந்தது என தெரிவித்தனா்.

முழு மதிப்பெண் பெறுவது கடினம்...: இது குறித்து தமிழாசிரியா்கள் கூறுகையில், இந்த வினாத்தாள் முற்றிலும் எளிதானவை என கூறி விட முடியாது. நன்கு படிக்கும் மாணவா்கள் 85 முதல் 90 மதிப்பெண்களுக்கும் மேல் பெறலாம். முழு மதிப்பெண் பெறுவது என்பது மிகவும் கடினம். இருப்பினும் சராசரி மாணவா்கள் 60 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், மெல்லக் கற்கும் மாணவா்கள் தோ்ச்சி பெறுவதிலும் எந்த சிரமமும் இருக்காது. கடந்த ஐந்தாண்டுகள் நடைபெற்ற பொதுத்தோ்வுகளிலிருந்து குறிப்பிடத்தக்க வினாக்கள் இடம்பெற்றிருந்தன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.