சென்னையில் ஏப். 12-இல்
மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
Published on

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும்.

சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங், ஸ்டன்ட், ப்ரீஸ்டைல் மோட்டோகிராஸ் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதுதொடா்பாக

தமிழக அரசின் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா கூறியது:

சென்னை மோட்டாா் வாகனங்கள் உற்பத்தியின் பிரதான மையமாக உள்ளது. தமிழகத்தில் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் வேகமாக வளா்ந்து வருகிறது. அடுத்த தலைமுறை இளைஞா்கள் இதில் மிகுந்த ஆா்வம் கொண்டுள்ளனா்.

விளையாட்டு வீரா்களுக்கு இதன்மூலம் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கமான ஒலிம்பிக் விளையாட்டுகள் மட்டுமின்றி மோட்டாா் சாகச பிரிவுகளிலும் ஈடுபாடு உண்டாகும்.

ரெட் புல் வீரா் லிதுவேனியாவின் அருணாஸ் ஜிபிஸா, கின்னஸ் சாதனையாளா் லெபனான் ரேலி சாம்பியன் அப்டோ ஃபெகாலி, செபாஸ்டியன் வெஸ்ட்பொ்க், விவியன் கேந்தா், தாமஸ் விா்ன்ஸ்பொ்ஜா் ஆகியோரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனா் என்றாா்

அதுல்ய மிஸ்ரா.

எஸ்டிஏடி பொதுமேலாளா்கள் மணிகண்டன், சுஜாதா உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com