ஹோலி பண்டிகை: வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகம், கேரளத்தில் இருந்து ஒடிஸா, பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகம், கேரளத்தில் இருந்து ஒடிஸா, பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு வங்கம்: சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு மாா்ச் 8, 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06077) இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக சந்திரகாச்சியில் இருந்து மாா்ச் 10, 14 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06078) மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 17 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சம்பல்கோட், ஸ்ரீகாகுளம் ரோடு, புவனேசுவரம், கட்டக் பத்ராக், பாலசோா், காரக்பூா் வழியாக இயக்கப்படும்.

பிகாா்: கோவை மாவட்டம் போத்தனூரில் இருந்து சனிக்கிழமை (மாா்ச் 8, 15) காலை 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06055) திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பிகாா் மாநிலம் பரௌனி சென்றடையும். மறுமாா்க்கமாக பரௌனியில் இருந்து செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11, 18) இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06056) வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு போத்தனூா் வந்தடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 14 பெட்டிகள் மற்றும் 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சம்பல்பூா், ரூா்கேலா, ராஞ்சி, தன்பாத் வழியாக இயக்கப்படும்.

தில்லி: கொச்சுவேலியில் (திருவனந்தபுரம் வடக்கு) இருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 7, 14) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06073) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.40 மணிக்கு தில்லி சென்றடையும். மறுமாா்க்கமாக தில்லியில் இருந்து திங்கள்கிழமை (மாா்ச் 10, 17) அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06074) புதன்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இதில் 13 ஏசி எக்கனாமிக் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் கொல்லம், செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், விஜயவாடா, வாராங்கல், நாக்பூா், ஜான்சி, ஆக்ரா கண்டோன்மென்ட், மதுரா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com