
பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து நாட்டை மேம்படுத்துங்கள் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"இந்த சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் உண்மையான தேசக் கட்டமைப்பு இருக்காது என்பதை நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். பெண்களின் தலைமை, வலிமை மற்றும் தொலைநோக்குப் பார்வை நம் முன்னேற்றத்திற்கு உதவுபவை. மக்கள்தொகையில் சரிசமமான பாதி பேரின் திறனை நாம் வெளிப்படுத்த வேண்டும். ஆட்சியில் அவர்களின் சம பங்கை உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிக்க | தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல: இபிஎஸ் பேட்டி
இந்தியாவின் மகள்களின் சார்பாக, பெண்கள் இடஒதுக்கீட்டை செயல்படுத்துமாறு நான் மீண்டும் அரசை வலியுறுத்துகிறேன். ஏனெனில் இது நமது கூட்டாட்சி ஒற்றுமையின் மதிப்பை மேம்படுத்தும். ஒரு நீண்ட தேசிய உரையாடலுக்கு அழைப்பு விடுக்கும்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசியலமைப்பு (106 ஆவது சட்டத்திருத்தம்) சட்டத்தை திருத்தம் செய்யுமாறு மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
பெண்களுக்கு அதிகாரம் கொடுங்கள், தேசத்தை மேம்படுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.