ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தொகுதி மறுசீரமைப்பு: ஜெகன் மோகனுடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!

ஜெகன் மோகன் ரெட்டியை திமுக நிர்வாகிகள் சந்தித்தது பற்றி...

News image

ஜெகன் மோகனுடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு

Updated On :12 மார்ச் 2025, 11:28 am IST

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் வருகிற மார்ச் 22 ஆம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய தமிழக அமைச்சர் எ.வ.வேலு, எம்பி வில்சன் ஆகியோர், கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேபோல், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவுக்கும் அழைப்பு விடுத்தனர்.

ஏற்கெனவே ஒடிஸாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று பிற்பகல் பெங்களூருவுக்குச் செல்லும் அமைச்சர் பொன்முடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்திக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.