டாஸ்மாக் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை! -செந்தில் பாலாஜி

டாஸ்மாக் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி..
செந்தில் பாலாஜி..
Published on
Updated on
1 min read

டாஸ்மாக் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்று மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த வாரம் மார்ச் 6 ஆம் தேதியில் இருந்து 3 நாள்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்தச் சோதனையில் பார் உரிமங்கள் வழங்குவதிலும் அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. இதில்,  அரசு கணக்கிலும் சேராமல் ரூ.1000 கோடிக்கும் முறைகேடு நடந்தது அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: பட்ஜெட்: அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள்! 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “எந்த முகாந்திரமும் இல்லாமல் டாஸ்மாக்கில் ஊழல் என குற்றம் சாட்டப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

ரூ.1,000 கோடி ஊழல் என ஒருவர் அறிக்கை விடுகிறார். அதன்பின் அமலாக்கத் துறையும் அதையே சொல்கிறது. ஒருவர் ரூ.1000 கோடி ஊழல் எனச் சொல்கிறார். மற்றொருவர் ரூ.40,000 கோடி முறைகேடு என்று சொல்கிறார். பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவுகிறது.

டெண்டரில் எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. டாஸ்மாக் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. டாஸ்மாக்கில் தவறு நடந்ததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களை திரட்டியதாக அமலாக்கத்துறையினர் கூறிள்ளனர். 4 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தின் பாரத் டெண்டர்கள் முதல் அனைத்து டெண்டர்களுமே ஆன்லைன் முறையில் எடுக்கப்படுகிறது.

மதுபானக் கொள்முதலில் யாருக்கும் சலுகைகள் காட்டப்படவில்லை. தமிழ்நாடு வாணிப கழகம் எதையும் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும். பட்ஜெட் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தடுக்க அமலாக்கத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நாங்கள் புதிய கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கவில்லை. ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்கையில் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது.” என்றார்.

இதையும் படிக்க: 3 வழித்தடங்களில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை! ரயில்வே அறிவிப்புகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com