மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

News image
காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்.
Updated On :16 மார்ச் 2025, 7:45 am

DIN

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று(மார்ச் 16) வெகு விமர்சையாக நடைபெற்றது.

கம்பீர சப்த முனீஸ்வரர் திருஉருவ சிலைக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சைவ, வைணவ, சமண, பௌத்தம் என பல்வேறு திருக்கோயில்கள் மிகவும் புகழ்பெற்றது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் ஆலயம் அமைந்துள்ளது.

Story image

சிறிய திருக்கோயிலாக இருந்த இதனை பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு மூன்று நிலை ராஜகோபுரம் , மூலவர் விமான கோபுரம், 25 அடி கம்பீர சப்த முனீஸ்வரர்களான சங்கிலிமுனி, செம்முனி, வால்முனி என மூன்று சிலை என அமைக்கப்பட்டு புணரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை(மார்ச் 14) மாலை கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.

திருக்கோயில் வாளகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பரிகார தெய்வங்களுக்காக 20 யாகசாலைகளும், மூலவர் பச்சையம்மனுக்காக யாகசாலை என 21 யாகசாலை அமைக்கப்பட்டு, 29 குண்டங்களில் யாகசாலை பூஜை ஸ்ரீமடம் மகேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 45-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு கால பூஜைகள் நடத்தி இன்று காலை 10 மணிக்கு பூர்ணாகதியை நிறைவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மேள தாளம், சிவ வாத்தியங்கள் என முழங்க திருக்கோயிலினை வலம் வந்த கலசங்கள், ராஜ கோபுரம், மூலவர் கோபுரம் , பரிவார தெய்வங்கள், சப்த முனீஸ்வரர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மூலவர் பச்சையம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்தில் தீபாரதனையுடன் பக்தர்கள் கண்டு இறை அருள் பெற்றனர்.

இந்த கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றும், தங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றினர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.