அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான வாக்கெடுப்பை பாஜக, பாமகவினர் புறக்கணித்தனர்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை சட்டப்பேரவை 9.30 மணிக்கு கூடியது. பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகின்றது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுகவினர் பலர் கலந்துகொண்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
செங்கோட்டையனின் வாக்கு முக்கியமானதாகக் கருதப்படும் நிலையில் அவருடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர், இந்தத் தீர்மானத்திற்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்தார்.
இதையும் படிக்க | போராட்டத்துக்குச் சென்ற அண்ணாமலை கைது!
இந்த நிலையில் வாக்கெடுப்புக்கு விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. காங்கிரஸ் சார்பில் 17 உறுப்பினர்கள் பேரவைத் தலைவருக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாஜகவினர் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். பின்னர், பாமக உறுப்பினர்களும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.
மேலும், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் இபிஎஸ்!

என் ஆட்சியை மு.க. ஸ்டாலின் பார்ப்பார் : எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பிரசாரம்!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி

இபிஎஸ் இன்று தில்லி பயணம்! பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


