திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை கேள்வி

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை

Updated On :17 மார்ச் 2025, 11:15 am IST

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டத்துக்கு செல்லும் முன் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நானோ, பாஜக நிர்வாகிகளோ பேசக் கூடாது என தமிழ்நாடு அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்துவிடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள்.

தேதி சொல்லாமல் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். தேவையெனில் முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்தே திமுக சந்திக்கவுள்ளது. நாட்டிலேயே மிக மோசமான ஊழல் அரசியல்வாதி எனில் அது செந்தில் பாலாஜிதான் என்றார்.

இதற்கிடையே அவர் தனது எக்ஸ் தளத்தில், திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம்.

திமுக அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.