ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது: கே. அண்ணாமலை

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என அண்ணாமலை பேசியிருப்பது குறித்து...

News image

'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை - எக்ஸ்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 2:51 pm IST

முன்மொழியப்பட்ட மேக்கேதாட்டு அணைத் திட்டம் தமிழகத்தின் நலன்களைப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படக் கூடாது என்று கூறியுள்ள தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனருமான கே. அண்ணாமலை, இந்த மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காணுமாறு தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களை வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தான் பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, எனது அரசியல் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் குறித்துத் தான் இருந்து வருகிறது. ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன். தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறோம். தமிழக தவெக அரசு திருத்திக் கொள்கிறது. வழக்கமான எதிர்க்கட்சி அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை.

நான் பாஜகவில் இருந்தபோதே, மேக்கேதாட்டு திட்டத்தை எதிர்த்தேன். பிரதமர் நரேந்திர மோடி தவறு செய்யாத நேர்மையான மனிதர் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதைக் கடுமையாக எதிா்க்கிறோம். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். "ஒரு பிரச்சினை இரண்டு மாநிலங்களைப் பாதிக்கும்போது, ​​இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பிரதமா் பேச்சு நடத்தி, நியாயமான தீர்வைக் காண வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

பெங்களூருக்கான குடிநீர் தேவை கர்நாடகாவிற்கு இருப்பதை ஒப்புக்கொண்ட அண்ணாமலை, அதே சமயம் அந்தத் தேவை தமிழகத்தின் நலன்களைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

"பெங்களூருக்கான குடிநீர் கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டும்; ஆனால் தமிழகத்தின் நலன்களைப் பாதிக்கும் வகையில் மற்றொரு அணை கட்டப்படக்கூடாது" என்று அவர் கூறினார்.

மேக்கேதாட்டு திட்டம் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாகத் தொடர்ந்து வருகிறது; முன்மொழியப்பட்ட அணை மற்றும் அதனால் ஆற்றின் கீழ்மடைப் பகுதிகளில் நீர் கிடைப்பதில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை குறித்த கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணமாக உள்ளன.

பாஜகவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டிற்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அண்ணாமலை கூறினார்.

மேலும், தமிழகத்தில் தற்போது புதிய முதல்வா் தலைமையில் ஆட்சி நடக்கிறது. பல எம்எல்ஏ-க்கள் முதல்முறையாக சட்டப்பேரவைக்குச் சென்றுள்ளனா். அவா்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுத்து, அதன் செயல்பாட்டைப் பார்ப்போம். அரசு சரியாகச் செயல்படவில்லை என்றால், முதலில் கேள்வி எழுப்புவது நாமாகத்தான் இருப்போம். ஆனால், காலில் சுடுதண்ணீர் ஊற்றப்பட்டது போல ஏன் பதற்றத்துடன் ஓட வேண்டும்? அவர்கள் பணியாற்றுவதற்கு அவகாசம் அளியுங்கள்.

தவெக ஆட்சியில் ஊழல் மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும், அமைச்சா்கள் சிலா் ஒப்பந்தங்களில் ஊழல் செய்யத் தொடங்கியுள்ளனா். அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன. ஓராண்டுக்குப் பிறகு இந்தப் பிரச்சினையை எழுப்புவதற்கு முன்பாகவே, இப்போதே நான் முதல்வரிடம் இதைத் தெரிவிக்கிறேன். முதல்வா் விஜய் தனது அமைச்சா்களுக்குக் கடிவாளம் போட வேண்டும். முதல்வர் ஊழலை ஒழிக்க விரும்புகிறார்; எனவே, தனது அமைச்சர்களும் அதே கொள்கையைப் பின்பற்றுவதை அவர் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Summary

'We The Leaders' movement founder K Annamalai said that the proposed Mekedatu dam project should not be taken forward at the cost...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.