ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தில்லி பயணம் பற்றி...

News image

செந்தில் பாலாஜி.

Updated On :19 மார்ச் 2025, 10:29 am IST

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.

தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் தில்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை முடிவில், ரூ.1,000 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தமிழக அரசுக்கு எதிரகாவும், செந்தில் பாலாஜியை பதவி விலகக் கோரியும் தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திடீர் பயணமாக செவ்வாய்க்கிழமை மாலை அமைச்சர் செந்தில் பாலாஜி விமானம் மூலம் தில்லி சென்றது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்றிரவு தில்லியில் தங்கியிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை சென்னை திரும்பியுள்ளார்.

தில்லிக்கு பயணம் மேற்கொண்டது ஏன்? யாரை சந்திக்கச் சென்றார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.