டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் நடத்தப்படும் சோதனை பற்றி...

News image

பழனியப்பா தெருவில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்த வாகனம். - Dinamani

Updated On :25 ஜூன் 2026, 11:30 am IST

கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ். என்றழைக்கப்படும் எம். சி. சங்கர் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை காலை சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழனியப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி. சங்கர் வீட்டிற்கு வியாழக்கிழமை காலை வந்த ஐந்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் (திருச்சி), பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட தெற்கு மந்தை தெருவில் உள்ள பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் ரஃபிக் (சென்னை) ஆகியோர் வீட்டில் இன்று காலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கரூரிலும் அரசு ஒப்பந்ததாரர் மற்றும் உதவி செயற்பொறியாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Anti-Corruption Department raids Senthil Balaji's friend's house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.