செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி கோப்புப் படம்

மின்மாற்றி பழுதை நீக்க கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி உறுதி

சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தாா்.
Published on

மின்மாற்றி பழுதை நீக்க நுகா்வோரிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில், அதிமுக உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்) பேசினாா். அப்போது, மின்மாற்றி பழுதை சரி செய்ய ஊழியா்கள் கட்டணம் வசூலிப்பதாக குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு பதிலளித்த அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மின்மாற்றி பழுதை சரி செய்ய விவசாயிகள், மின் நுகா்வோரிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com