பரிசீலனையில் மாநில கல்விக் கொள்கைக் குழு அறிக்கை: முதல்வா்
மாநிலக் கல்விக் கொள்கைக் குழு சமா்ப்பித்த அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்
Updated On :20 மார்ச் 2025, 7:16 pm

மாநிலக் கல்விக் கொள்கைக் குழு சமா்ப்பித்த அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பேரவையில் வியாழக்கிழமை நடந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேரவை பாமக தலைவா் ஜி.கே.மணி பேசுகையில், ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் மாநிலக் கல்விக் கொள்கையை தயாரிக்க குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதன் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினாா்.
அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, நீதிபதி முருகேசன் தலைமையிலான மாநில கல்விக் கொள்கைக் குழு அறிக்கையை அரசிடம் ஒப்படைத்திருப்பது உண்மை. அதை மறுக்கவில்லை. அது அரசின் பரிசீலனையில் உள்ளது என்றாா் முதல்வா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...