
சேலம்: ஆத்தூரில் அரசு டாஸ்மாக் கடையை அகற்றவில்லையொன்றால் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் குடும்பத்துடன் குடிக்கும் போராட்டம் என்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் ரயிலடி தெரு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடை அமைந்துள்ள பகுதி வழியாக தனியார் மருத்துவமனை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தனியார் பள்ளி உள்ளிட்டவை உள்ளன.
மது பிரியர்கள் குடித்துவிட்டு, அவ்வழியே செல்லும்பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்து மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க: சத்தீஸ்கர் என்கவுன்டரில் 22 நக்சல்கள் சுட்டுக்கொலை; காவலர் வீர மரணம்
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் பேசிய பார்த்திபன், ”பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் இல்லையென்றால் முற்றுகை போராட்டம் நடைபெறும், அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்தரோடு குடிக்கும் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளி குழந்தைகள் சீருடையில் கலந்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.