இதுதான் திமுக அரசின் சாதனை! எதைச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

கடன்தான் அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி கே. பழனிசாமி
எடப்பாடி கே. பழனிசாமிகோப்புப்படம்
Published on
Updated on
2 min read

கடன் மீது கடன்களை வாங்கி மக்கள் மீது கடன் சுமையை செலுத்தியது தான் திமுக அரசின் சாதனை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பட்ஜெட் கணக்கை சரியாக செயல்படுத்தும் பணியை நீங்கள் பார்த்துக் கொண்டால் போதும், எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றும் பதிலளித்துள்ளார்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரைக்குப் பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நிதியமைச்சர் அளித்த பதில் உரையில் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்ததாகவும், வார்த்தை ஜாலங்கள் இருந்ததை தவிர செயல்பாடுகள் எதுவும் இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த பிறகு அவர்களின் கடன் 5 லட்சம் கோடியாக தான் இருக்கும் என்றும், அதுவே அவர்களது சாதனையாக இருக்கும்.

திமுக அரசு பெற்ற கடன் தொகையை மறைக்கும் வகையில், சதவிகிதம் அடிப்படையில் குறிப்பிட்டு அவர்கள் பெற்ற கடன் தொகையை மறைக்க நிதியமைச்சர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

73 ஆண்டுகால ஆட்சி காலங்களில் 5 லட்சம் கோடி மட்டுமே கடன் வாங்கி இருந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. அதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அரசு வாங்கும் கடன் தொகை படிப்படியாக குறைக்கப்படும் என்றும், அதற்காக நிதி மேலாண்மை குழு அமைக்கப்படும் என்றெல்லாம் அறிவித்தார்கள். இது போன்ற அறிவிப்புகளை அறிவித்தார்களே தவிர நிதி நிலைமை சீரானது குறித்தோ, நிதி மேலாண்மை குழு செயல்பாடு என்ன என்பது குறித்தும் இதுவரை எந்தவித வெள்ளை அறிக்கையும் வெளியிடவில்லை.

நிதி மேலாண்மை குழு அமைத்த பிறகு கடன் தொகை அதிகரித்து தான் உள்ளது, இதுதான் அந்த குழுவின் சாதனை.

கலால் வரி, வாகன வரி, பத்திரப்பதிவு துறை வரி மூலம் வரி வருவாய் உள்ளிட்ட வருவாய் மூலம் 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை விட, 2025 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கூடுதல் வரி வருவாய் இருக்கும் என திமுக அரசு தெரிவித்தது.

அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி வருவாய் இருந்த போதிலும், 57 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் மூலதன செலவு இருக்கும் என்றால், மீதி இருக்கும் கையிருப்பில் இருக்கும் தொகையில் என்ன புதிய திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.

கடன் மீது கடன்களை வாங்கி மக்கள் மீது கடன் சுமையை செலுத்தியது தான் திமுக அரசின் சாதனை.

பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது கொரோனா காலம் என்பதால் அப்போது செயல்படவில்லை.

திமுக அரசின் மெத்தன போக்கால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஏராளமான நிறுவனங்கள் அண்டை மாநிலத்துக்கு சென்று விட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்ன முதலீடு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பலமுறை கேட்டும் இதுவரை திமுக அரசு வெளியிடவில்லை.

பட்ஜெட் கணக்கை சரியாக செயல்படுத்தும் பணியை நீங்கள் பார்த்துக் கொண்டால் போதும், எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்வோம். ஆடு நனைகிறது ஓநாய் அழுகுதாம் உங்கள் கரிசனம் எங்களுக்கு வேண்டாம். அதிமுகவை பொருத்தவரை கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படும். கொள்கை மாறாது அவை நிரந்தரமானது.

திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒரே கொள்கை உள்ள கட்சி என்று முதல்வர் கூறுகிறார் என்றால் அனைத்து கட்சியும் ஒரே கட்சியாக இணைத்துவிடலாமே.

தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி அதிமுக என்றும் தன்மானத்தை இழந்தது கிடையாது என்று சுட்டிக் காட்டிய அவர், காவிரி நீர் விவகாரத்தில், கூட்டணியில் இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் செயல்பாட்டையே முடக்கினோம். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

அதிமுக அலுவலகத்தை எதிரிகள் சூறையாடிய போது பாதுகாப்பு அளிக்குமாறு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த போதும் கட்சி அலுவலகத்தை சூறையாடப்பட்னு சேதப்படுத்தி அலுவலகத்தில் பூட்டு போடும் நிலையை ஏற்படுத்தியது திமுக அரசு தான் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com