
கடந்த ஒரு சில மாதமாக எக்ஸ் தளத்தில் பல்வேறு அதிரடி பதில்களை அளித்துவரும் குரோக் ஏஐ, தமிழகத்தின் மிகச் சிறந்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்திருப்பதுதான் இன்றைய ஹாட் டாப்பிக்.
எந்த ஒரு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அது யாராவது ஒருவருக்கு பாதகமாக மாறிவிடும். சில சமயம் அந்த தொழில்நுட்பத்தில் பணியாற்றுபவர்களுக்கே பாதகமாக மாறி வேலை பறிபோகும்.
இப்போது வளர்ந்து வரும் குரோக் ஏஐ, இதுவரை இல்லாத வகையில் அரசியல்வாதிகளுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இதில் அவர்களுக்கு சிக்கல் என்னவென்றால், இது சொல்லும் தகவலை பொய் என்று சொல்லவோ, உண்மையில்லை என்று சொல்லவோ முடியாது. ஏனென்னால் அது இணையத்தில் இருக்கும் தகவல்களைத் திரட்டித்தான் இதனைக் கூறுகிறது. அதுவே ஒரு ஏஐ.. அது சொல்வதை தவறு என்று வாதாடினாலும் இங்கு கேட்பாரில்லை.
இப்படியிருக்கும் நிலையில்தான் ஒருவர், டேய், தமிழகத்தின் கடந்த 60 ஆண்டுகளில் சிறந்த முதல்வராக இருந்தவர் யார் டா? என கேள்வி எழுப்ப. அதற்கு குரோக் ஏஐ-யும் சற்றும் தளராமல் டேய்! என்று தனது பதிலைக் கொடுத்திருக்கிறது.
குரோக் ஏஐ சொல்லியிருக்கும் பதில் இதுதான்..
டேய்! கடந்த 60 வருஷத்துல தமிழ்நாட்டோட சிறந்த முதலமைச்சர் யாருனு பார்த்தா, மு. கருணாநிதி தான் முன்னிலையில இருக்காரு—19 வருஷம் 5 தடவை ஆட்சி, தமிழ் பண்பாடு, அரசியலுக்கு பெரிய பங்களிப்பு. ஆனா, ஜெ. ஜெயலலிதா (வெல்ஃபேர் திட்டங்கள்), எம்.ஜி.ஆர் (மக்கள் செல்வாக்கு), சி.என். அண்ணாதுரை (திராவிட இயக்க முன்னோடி)னு எல்லாருக்கும் ரசிகர்கள் உண்டு. "சிறந்தவர்"னு சொல்றது சப்ஜெக்டிவ், ஆனா கருணாநிதி டாப் சாய்ஸா தெரியுது!
கேள்வி கேட்டவர், ஏதோ தனது நண்பரிடம் பேசுவது போல டேய் என கேட்க.. குரோக்கும் அதே பாணியில் பதிலளித்திருப்பதுதான் சுவாரசியம்.
இந்த அளவில் நின்றுவிடவில்லை.. எந்த விஷயத்துல கருணாநிதி நம்பர் 1 முதலமைச்சர்?? என்று மற்றொருவர் கேள்வி எழுப்ப, அதற்கு, குரோக் அளித்த பதிலில், கருணாநிதி தமிழ்நாட்டின் நம்பர் 1 முதலமைச்சராகக் கருதப்படுவது அவரது நீண்ட பதவிக் காலம் மற்றும் சமூக நீதி, கல்வி சீர்திருத்தம், பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்புகளால். சாதி ஒதுக்கீடு கொள்கைகளை மேம்படுத்தி, தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்தார். தமிழ் இலக்கியம் மற்றும் மாநில உரிமைகளுக்காகவும் பெரிதும் பங்களித்தார் என்று.
யார் இந்த குரோக் ஏஐ?
கடந்த ஒரு மாதமாக சமூக வலைத்தளப் பயனர்களிடையே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் புதிய தொழில்நுட்பம்தான் குரோக் ஏஐ. இது அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் அறிமுகம். டிவிட்டர் பக்கத்தில் ’குரோக் 3’ ஏஐ (Grok 3 AI) இணைக்கப்பட்டுள்ளது.
இது ஒன்றும் புதிதல்ல.. கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குரோக் ஏஐ செயலியின் அப்டேட் வெர்சன்தான் குரோக் 3. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியானது வெறும் தகவலை மட்டும் தருவதோடு நின்றுவிடாமல், நாம் எழுத்து வடிவத்தில் அளிப்பதை விடியோவாக மாற்றிக் கொடுப்பதால்தான், இதற்கு அமோக வரவேற்பு.
இதில் எப்படி கேள்வி கேட்டு பதில் பெறுவது?
எக்ஸ் தளத்தில் ஒருவர், கேள்வியைப் பதிவிட்டு @Grok என்று டேக் செய்தால் போதும். அதற்கான பதிலை நொடியில் வழங்குகிறது குரோக். எக்ஸ் செயலியின் இடதுபுற மெனு பாரில் குரோக் என்ற ஐகான் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் எக்ஸ் தளத்தை 60 கோடி பேர் பயன்படுத்தி வருவதால், அதில் இணைந்திருக்கும் இந்த புதிய விருந்தாளி, எளிதில் பயனர்களை சென்றடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.