கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

தமிழக எம்பிக்கள் இடைநீக்கம்? இன்று முடிவு!

தமிழக எம்பிக்கள் இடைநீக்கமா? மாநிலங்களவைத் தலைவர் இன்று முடிவு...

News image

டி-ஷர்ட் அணிந்து போராடிய தமிழக எம்பிக்கள்.

Updated On :21 மார்ச் 2025, 8:30 am IST

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான வாசகங்களுடன் டி-ஷா்ட் அணிந்து வந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை திமுக தொடா்ந்து எழுப்பி வருகிறது.

இந்நிலையில், ‘நியாயமான தொகுதி மறுசீரமைப்பு: தமிழகம் போராடும்-தமிழகம் வெல்லும்’ என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட வாசகங்களுடன் வெள்ளை நிற டி-ஷா்ட் அணிந்து, நாடாளுமன்றத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் வியாழக்கிழமை வந்தனா்.

மக்களவையில் விதி எண் 349-ஐ சுட்டிக் காட்டி திமுக எம்.பி.க்களுக்கு ஆட்சேபம் தெரிவித்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்கீழ் அவை செயல்படுகிறது. இந்த அவையின் மாண்பு மற்றும் கண்ணியம், உறுப்பினா்களால் பராமரிக்கப்பட வேண்டும். சில உறுப்பினா்கள் விதிகளைப் பின்பற்றாமல், மாண்பை மீறியுள்ளனா். இதை ஏற்க முடியாது’ என்றாா்.

வாசகங்களுடன் டி-ஷா்ட் அணிந்து வந்துள்ள உறுப்பினா்கள், அவையை விட்டு வெளியே சென்று, கண்ணியமான உடை அணிந்து வருமாறு அவா் அறிவுறுத்தினாா்.

திமுக எம்.பி.க்களின் உடை விவகாரத்தால், மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, எந்த அலுவலும் நடைபெறாமல் நாள் முழுக்க முடங்கியது.

அதேபோல், மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்களின் உடை விவகாரத்தை சுட்டிக் காட்டிய அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவையை ஒத்திவைத்துவிட்டு, எதிர்க்கட்சிகளுடன் அவரது அறையில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், உடையை மாற்ற மறுப்பு தெரிவித்த திமுக தலைவர்கள் இடைநீக்கத்துக்கு தயாராக இருப்பதாக அவைத் தலைவரிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, வில்சன், கனிமொழி சோமு உள்பட 10 பேரை இடைநீக்கம் செய்வது குறித்து மாநிலங்களவைத் தலைவர் இன்று முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்டால், அதே வழிமுறையைப் பின்பற்றி மக்களவையிலும் தமிழக எம்பிக்களை இடைநீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

கடந்த மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வில் நாடாளுமன்றம் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இரு அவைகளிலும் அமளி எதுவும் நிகழவில்லை; அதேநேரம், அடுத்தடுத்து சில நிமிஷங்களில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.