மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

நள்ளிரவில் பயங்கரம்... மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக...

கோப்புப்படம்

Published On :

மதுரை தனக்கன்குளத்தில் ரெளடி காளீஸ்வரன் என்பவர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடி காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்களில் வந்த‌ மர்ம நபர்கள் அரிவாளால் காளீஸ்வரனை வெட்ட முயன்றனர். இதையடுத்து, அவர் ஓட முயற்சி செய்துள்ளார். அவரைப் பின்தொடா்ந்து விரட்டிச் சென்ற மர்மநபர்கள், காளீஸ்வரனை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காளீஸ்வரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காளீஸ்வரன் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.