
தெலங்கானா பேரவையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு முடிவின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சென்னையில் முடிவெடுக்கப்பட்ட படி ஹைதராபாத்திலும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நீதி, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவத்தை நிலை நிறுத்தும் வகையில் நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தும் தெலங்கானா பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
இது ஒரு தொடக்கம்தான். இரண்டாவது கூட்டுக் குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் அதைப் பின்பற்றும். இந்தியாவின் எதிர்காலத்தை நியாமற்ற முறையில் மாற்றியமைக்க யாரையும் அனுமதிக்கமாட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.