தென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சுதாகரனிடம் ஒரு மணி நேரம் விசாரணை!

சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரான சுதாகரனிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை..

சுதாகரன்

Published On :

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரான சுதாகரனிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்காக ஆஜரானார்.

அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன் கூடுதல் கண்காணிப்பாளர் முருகவேல், துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்டு அடங்கிய குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த சுதாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசியதாவது,

தன்னிடம் நாற்பது கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் விசாரணை நன்றாக இருந்தது எனவும் தெரிவித்தார். கேட்ட கேள்விக்கு தனக்குத் தெரிந்த உண்மையைத் தெளிவாகக் கூறிவிட்டேன் என்றும், முதன்முறையாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன் எனவும் விசாரணை தீவிரமடைந்துள்ளதா, உண்மை வெளிவருமா என்பது குறித்துத் தெரியவில்லை எனவும் பதிலளித்தார்.

மேலும் விசாரணைக்காக வந்துள்ளேன் விசாரணை முடிந்து விட்டது கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளேன். விசாரணை முறையாக நடந்ததா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இதைக் கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள் எனப் பதில் அளித்துச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.