விழுப்புரத்தில் கைப்பேசி விற்பனையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

தனியார் கைப்பேசி விற்பனையகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு..
விழுப்புரத்தில் கைப்பேசி விற்பனையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!
Updated on
1 min read

விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலையிலுள்ள தனியார் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ரெட்டியார்மில் பகுதியில் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையம் நடத்தி வருபவர் அ. ஜாகீர் உசேன், இவரது கடைக்கு புதன்கிழமை காலை வந்த விழுப்புரம் மகாராஜபுரத்தைச் சேர்ந்த அருண் (20) வந்து, தனது கைப்பேசியைப் பழுது நீக்கித் தருமாறு கூறினாராம். இதற்கு ரூ.200 ஆகும் பணத்தை தந்தால் தான் சரிபார்த்துத் தர முடியும் எனக் கூறினாராம். என்னிடமே பணம் கேட்கிறாயே எனக் கூறிவிட்டு அருண் சென்றாராம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை விற்பனையகத்தை ஜாகீர் உசேன் திறந்து வைத்துவிட்டு, வெளியே சென்றார். அப்போது ஜாகீர் உசேனின் தம்பி ஷேக் அலாவுதீன் விற்பனையகத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த அருண், தனது கைப்பேசியைத் தருமாறு கேட்டபோது, என்னிடமே பணம் கேட்கிறாயா எனக் கேட்டு, கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை கடையில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அதிர்ஷ்டவசமாக ஷேக் அலாவுதீன் மீது விழவில்லை. எனினும் கடையிலிருந்த பொருள்கள் சேதமடைந்தன.

தகவலறிந்த விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்திர குமார் குப்தா மற்றும் போலீஸார் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com