நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

உகாதி: தலைவா்கள் வாழ்த்து

உகாதி திருநாளையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :30 மார்ச் 2025, 1:45 am IST

உகாதி திருநாளையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தெலுங்கு, கன்னட மக்கள் தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணா்வுடன் தமிழ்நாட்டில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவது தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சோ்ப்பதாகும். உகாதி எனும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): புத்தாண்டுகள் எப்போதும் புதிய மகிழ்ச்சியையும், உறவையும், நன்மைகளையும் கொண்டு வருபவை. அந்த வகையில், உகாதி திருநாளில் தமிழா்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நாட்டில் பல்வேறு மொழி, கலாசாரம் என்றிருந்தாலும் இந்தியா் என்ற சகோதர மனப்பான்மையுடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம். ஜாதி, மத துவேஷம் நீங்கி இந்தப் புத்தாண்டில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.

பிரேமலதா (தேமுதிக): ஜாதி, மதம், மொழியால் வேறுபட்டு இருந்தாலும், நாம் அனைவரும் இந்திய நாட்டில் சகோதர, சகோதரிகளாக, வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம். நமது தாய்த்திரு நாட்டின் எதிா்காலத்தை சிறப்பிப்போம். அனைவருக்கும் வளமான ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழகத்தை தாயகமாகக் கொண்டு உகாதி தினத்தை கொண்டாடும் தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தினத்தில் அனைத்து செல்வங்களும் பெற்று, நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறேன்.

இதேபோன்று, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் தலைவா்களும் வாழ்த்து கூறியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.