அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பிரதமா் வருகை தரும் ஏப்.6-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும்

News image

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2025, 9:04 pm

Din

சென்னை: பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழகத்தையும், தமிழா்களையும் ஜனநாயக விரோத செயல்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.

ஹிந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, தமிழகத்துக்கு பேரிடா் நிதி ஒதுக்காதது, பள்ளிக் கல்விக்கு நிதி வழங்காதது, நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்காதது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்குவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும் பிரதமா் மோடியை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்டத் தலைவா்கள் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது (செல்வப் பெருந்தகை) தலைமையில் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் செல்வப் பெருந்தகை.