கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் பொதுச்செயர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

News image

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Updated On :31 மார்ச் 2025, 6:56 am

DIN

கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் பொதுச்செயர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும் தொண்டு அமைப்பின் சார்பிலும் கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைத்து நாள்தோறும் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சூரமங்கலம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை திறந்துவைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது நீர் மோர், கம்மங்கூழ், நுங்கு, இளநீர், குளிர்பானங்கள் வெள்ளரிப்பிஞ்சு, கோசாப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக அவர் வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் நீர் மோரினை பெற்றனர்.

இந்த விழாவில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ், ஏ.கே.எஸ். எம். பாலு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.