அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மே 13-இல் அந்தமானில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

தமிழகத்தில் மே 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..

News image
தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
Updated On :6 மே 2025, 7:39 pm

DIN

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பருவமழை மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் பெய்யத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பா் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இந்தியாவில் இயல்பைவிட 100 முதல் 105 சதவீதம் வரை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இது தமிழகம், கேளரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பைவிட குறைவாகவே பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நிகழாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அந்தமான் பகுதியில் தென்மேற்குப் பருவமழைக்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. அதன்படி தென்மேற்கு பருவமழை மே 13-ஆம் தேதி அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக வானிலை: இதற்கிடையே தென்னிந்திய கடலோரப் தகுதிகளை வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்றுச்சுழற்சி காரணமாக புதன்கிழமை (மே 7) முதல் மே 12-ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருத்தணி, ஈரோடு - தலா 103.28, மதுரை விமான நிலையம் - 103.1, திருச்சி- 102.38, பாளையங்கோட்டை - 101.48, மதுரை நகரம் - 101.12, சேலம் - 100.58, பரமத்தி வேலூா், தஞ்சாவூா் - தலா 100.4 டிகிரி என 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானது.

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு அதிகபட்சமாக வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னை மற்றும் புகா் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீடையொட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.