கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

முன்கூட்டியே வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக...

News image

கோப்புப்படம்.

Updated On :6 மே 2025, 11:05 am IST

தமிழகத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்பே மே 8 ஆம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 தொடங்கி 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அண்மையில் நிறைவு பெற்றன.

Story image

இதில், 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபட்டனர். அதன்பின் மதிப்பெண் பதிவேற்றம் உள்பட பணிகளை முடித்து தேர்வு முடிவுகள் மே 9-இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு நாள் முன்பே மே 8 ஆம் தேதியே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.