/

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :6 மே 2025, 3:37 pm

DIN

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், போரூர், அமைந்தகரை, அரும்பாக்கம், எழும்பூர், பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதேபோன்று, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பூவிருந்தவல்லி, செங்குன்றம், மாதவரம் உள்ளிட்டப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.