ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

தூத்துக்குடி கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் பலி!

தூத்துக்குடி கடலில் மூழ்கி இருவர் பலி தொடர்பாக...

(கோப்புப்படம்)

Published On :6 மே 2025, 12:01 pm IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மொட்டகோபுரம் கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் பலியாகினர்.

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன்(40). ஆட்டோ ஓட்டுநரான இவர் கோமஸ்புரம் நேரு நகர் சுனாமி காலனியைச் சேர்ந்த முருகன் மகள் காளிஸ்வரி(16) உள்பட சிறுவர், சிறுமிகளை அழைத்துக்கொண்டு மொட்டை கோபுரம் கடற்கரையில் திங்கள்கிழமை மாலையில் குளித்துக்கொண்டிருந்தனராம்.

அப்போது, எதிர்பாராதவிதமாக காளிஸ்வரி கடலில் மூழ்கினாராம். அவரைக் காப்பாற்றச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி விஜயனும் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் தாளமுத்துநகர் போலீஸார், கடலோர பாதுகாப்புக்குழு போலீஸார், மீனவர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிறுமி காளிஸ்வரி உடல் திங்கள்கிழமை இரவு கரை ஒதுங்கியது. இதனைத் தொடர்ந்து அந்தோணி விஜயன் உடல் திங்கள்கிழமை காலையில் அங்கிருந்த பாறை இடுக்கில் இருந்து மீட்கப்பட்டது.

இவர்கள் இருவரது சடலத்தையும் கடலோர பாதுகாப்புக் குழு போலீஸார் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.