விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

விமான நிலையத்துக்கு இணையாக பேருந்து முனையம்: முதல்வர் ஸ்டாலின்

விமான நிலையத்துக்கு இணையாக பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலின்

Published On :9 மே 2025, 12:33 pm IST

திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டலின், விமான நிலையத்துக்கு இணையாக பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்வர் திறந்து வைத்து உரையாற்றினார். இந்த பேருந்து முனையம் ரூ.408.36 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பேருந்து முனையத்தை திறந்துவைத்த முதல்வர், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் அது பற்றியும் கேட்டறிந்தார்.

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தைத் திறந்துவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இது பஞ்சப்பூர் அல்ல, எல்லா ஊரையும் மிஞ்சப்போகிற மிஞ்சப்பூர் என்று தோன்றியது. மேலும், திருச்சி விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மின் தூக்கி, நகரும் படிகட்டு, ஏசி வசதி என விமான நிலையத்துக்கு இணையான வசதிகள் உள்ளன. தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சிக்கு இப்படியொரு பேருந்து முனையம் அவசியம்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போல திருச்சியில் காமராஜர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இடைநிற்றல் கூடாது என மாணவர்களை தேடிப்போய் மீண்டும் பள்ளிக்கு அனுப்பினோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.