போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அரசு அழைப்பு

இலவசப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெற தமிழக அரசு அழைப்பு.
tngovt
தமிழக அரசு
Published on
Updated on
1 min read

போட்டித் தேர்வுக்காக இலவசப் பயிற்சி தமிழக அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் சேர்ந்து பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி (TNPSC, SSC, IBPS, RRB) ஆகிய முகமைகள்  நடத்தும் போட்டித் தேர்வுகளில்  கலந்து கொள்ளும்  தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு  தமிழக அரசின் சார்பில் இயங்கும்  போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள  சர் தியாகராயா  கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று,சேர்க்கை  நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாள்களில் நடைபெற உள்ளது.  

பயிற்சி வகுப்புகளில்   சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருப்பதோடு  01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை

பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள்  www.cecc.in வாயிலாக 16.05.2025 முதல் 31.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை  மேற்குறிப்பிட்ட இணையதள  முகவரியில்  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.   மேலும் விவரங்களுக்கு  044-25954905  மற்றும்  044-28510537   ஆகிய  தொலைபேசி  எண்களைத்   தொடர்பு கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு  தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்,  ஜூன் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 'பெருமை கொள்கிறேன்! ஊக்கம் பெறுகிறேன்!' - தினமணி தலையங்கம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com