
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. ஒட்டுமொத்தமாக 92.09% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார்.
காலையே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டாலும், மாணவர்கள் பிற்பகல் 2 மணி முதல் தேர்வு முடிவுகளை இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் https://tnresults.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவா்களுக்கு கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிளஸ் 1 -ல் 92.09% தேர்ச்சி
தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,07,098 இதில் 7,43,232 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.09% ஆகும்.
தேர்வு எழுதிய 4,24,610 மாணவிகளில் 4,03,949 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.13% தேர்ச்சி ஆகும்.
தேர்வு எழுதிய 3,82,488 மாணவர்களில் 3,39,283 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 88.70% தேர்ச்சி ஆகும்.
மாணவர்களை விட மாணவிகள் 6.43% தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.92% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய 9,205 மாற்றுத் திறனாளிகளில் 8,460 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91.91% ஆகும்.
தேர்வு எழுதிய 125 சிறைவாசிகளில் 113 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 90.40% ஆகும்.
தேர்வு எழுதிய 4,326 தனித்தேர்வர்களில் 950 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 21.96% ஆகும்.
பாட வாரியாக முழு மதிப்பெண்
தமிழ் - 41
ஆங்கிலம் - 39
இயற்பியல் - 390
வேதியியல் - 593
உயிரியல் - 91
கணிதம் - 1338
தாவரவியல் - 4
விலங்கியல் - 2
கணினி அறிவியல் - 3,535
வரலாறு - 35
வணிகவியல் - 806
கணக்குப் பதிவியல் - 111
பள்ளி மேலாண்மை வாரியாக தேர்ச்சி
அரசுப் பள்ளிகள் - 87.37%
அரசு உதவிபெறும் பள்ளிகள் - 93.09%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.03%
இருபாலர் பள்ளிகள் - 92.40%
பெண்கள் பள்ளிகள் - 95.02%
ஆண்கள் பள்ளிகள் - 83.66%
ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகள் 11.36% கூடுதலாகத் தேர்ச்சி விகிதத்தைக் காட்டியுள்ளன. இருபாலர் பயிலும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8.74% கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரிவு வாரியாக தேர்ச்சி விகிதம்
அறிவியல் பாடப் பிரிவுகளில் பயின்ற மாணவர்களில் 95.08% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வணிகவியல் பாடப் பிரிவில் பயின்றவர்களில் 87.33% பேரும், கலைப் பிரிவில் 77.94% பேரும், தொழிற்பாடத்தில் 78.31% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
பிளஸ் 1 தேர்வு எழுதிய மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 7558
100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 2,042
100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 282
இதையும் படிக்க | 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.