
கோடை வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகலில் மதுரையில் பரவலாக மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பட்டியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
மதுரை மாநகர் பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கியது. ஆனையூர், கலைநகர், வள்ளுவர் காலனி, தபால்தந்தி நகரில் பிற்பகலில் பரவலாக பலத்த மழை பதிவாகியிருக்கிறது.
மதுரையில் பெய்து கோடை மழை காரணமாக தாழ்வான பகுதிகளிலும் பள்ளமான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
பலத்த மழையின் காரணமாக செல்லூர் பகுதியில், வீட்டின் மீது பேனர் விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் மிதமான மழை பதிவாகியிருக்கிறது. ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கறம்பக்குடியில் இன்று பிற்பகலில் மிதமான மழை பெய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.
அரியலூர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.