
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா எனத் தெரியவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தமிழ்நாட்டில் திமுக கூட்டணிதான் கூட்டணி என்ற வடிவத்துடன் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணி என்கிற ஒரு வடிவத்தையே எட்டவில்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலைச் சந்திப்போம் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியாது.
அதே கூட்டணியில் இருந்த பாமக எந்த கூட்டணி என இதுவரை அறிவிக்கவில்லை. தேமுதிகவும் இன்னும் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. அதனால் அவர்கள் கூட்டணியாகவே இன்னும் வடிவம் பெறவில்லை.
விஜய்யை அதிமுக கூட்டணியில் இணைக்க விரும்புவதாக செய்திகள் வருகின்றன. அதை அவர் ஏற்றுக்கொள்வாரா? அல்லது என்னுடைய தலைமையில் நீங்கள் வாருங்கள் என்று கூறுவாரா? எனத் தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சியில் கூட்டணி என்கிற முகாந்திரம் இல்லை.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்பது உறுதி. தமிழ்நாட்டைப் பொருத்தவரை திமுக கூட்டணி வலுவாக உள்ளது" என்று தெரிவித்தார்.
ஆனால், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை தவெக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அரக்கோணம் மாணவி பாலியல் புகார்: அரசு நடவடிக்கை எடுக்குமா? - இபிஎஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.