மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறாரா முதல்வர்?

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது பற்றி..

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின்

IANS

Updated On :20 மே 2025, 4:43 am

DIN

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல் திட்டக்குழுவுக்கு மாற்றாக நீதி ஆயோக் உருவாக்கப்பட்டது. நீதி ஆயோக் தலைவராக பிரதமர் இருக்கிறார்.

இந்நிலையில் நடப்பாண்டு நீதி ஆயோக் கூட்டம் மே 24-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், முக்கிய பொறுப்புகளை வகிக்கும் மத்திய அமைச்சா்கள் பங்கேற்பார்கள்.

தொடர்ந்து, இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக முதல்வர் மே 23 ஆம் தேதி இரவு தில்லி செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.