கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இறந்த யானை வயிற்றில் குட்டி யானை.. வனக் கால்நடை மருத்துவர்கள் விளக்கம்

கோவையில் இறந்த பெண் யானையின் வயிற்றில் குட்டி யானை இருந்தது பற்றி வனத்துறை விளக்கம்

News image
குட்டி யானை
Updated On :21 மே 2025, 9:39 am

DIN

கோவையில் நேற்று இறந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி சிசுவும், பிளாஸ்டிக் கழிவுகள், புழுக்கள் இருந்ததை கண்டு வன ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், யானையின் உடல்கூறாய்வின்போதுதான், கருப்பையில் 12 முதல் 15 மாதம் மதிக்கத்தக்க ஆண் யானை சிசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யானை வயிற்றில் குட்டி இருப்பதை அறியும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்பதால் அதனைக் கண்டறிய முடியாமல் போனதாக வனக் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

யானையின் கர்ப்பக் காலம் 18 முதல் 22 மாதங்கள் என்பதால், 14 மாத சிசுவைக் காப்பாற்ற முடியாமல் போனதாகவும், அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதால் நுண்ணுயிர் தாக்கி யானைக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. நுண்ணுயிர் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளுறுப்புகள் பாதித்து படிப்படியாக செயலிழந்து யானை உயிரிழந்தது. யானையின் சாணத்தில் அலுமினியம் ஃபாயில், பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன என்றும் வன கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் கடந்த நான்கு நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. யானையின் உடல் கூறாய்வு பரிசோதனையில் அதன் வயிற்றில் 15 மாத கருவுடன், பிளாஸ்டிக் கழிவுகளும் புழுக்களும் இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வனத்துறையினரின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

கடந்த மே 17 - ம் தேதி பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில், தனது குட்டியுடன் மயங்கி விழுந்த தாய் யானைக்கு வனத் துறையினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். கும்கி யானையின் உதவியுடன் கிரேன் மூலம் பெல்ட்டால் தூக்கி நிறுத்தப்பட்டு, தற்காலிக தொட்டியில் நீர் நிரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதாசிவம், சுகுமார், மேகமலை புலிகள் காப்பக மருத்துவர் கலைவாணன் மற்றும் மருத்துவர் முத்துராமலிங்கம் ஆகியோர் சிகிச்சையை மேற்பார்வையிட்டனர்.

ஆனாலும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. அதன் உடற்கூறு ஆய்வில், யானையின் வயிற்றில் 15 மாத வளர்ச்சி அடைந்த குட்டி இருந்ததும், அத்துடன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளும், புழுக்களும் இருந்ததும் கண்டறியப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் யானையின் வயிற்றில் இருந்து இருப்பது, வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருவதையும், வன விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது என வன ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

யானை கீழே படுத்துவிட்டது என்றால் துப்பிக்கையை வைத்து தடுக்கும். ஆனால் தும்பிக்கையை தூக்கக் கூட முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் செவ்வாய்க்கிழமை யானை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.