ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை அதிகரிப்பு! காரணம் என்ன?

அண்டை மாநிலங்களில் பெய்து வரும் மழையால் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சற்று அதிகரித்துள்ளது.

News image

கோயம்பேடு சந்தை

Updated On :21 மே 2025, 11:46 am IST

சென்னை: அண்டை மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழையின் பாதிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.

மழையின் எதிரொலியாக ஒவ்வொரு காய்கறிகளின் விலை ஐந்து முதல் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மற்றும் அண்டை மாநிலங்களாக இருக்கக்கூடிய கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்தும் அதிகளவிலான காய்கறிகள் வருகின்றன.

கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிவரத்து குறைவாக இருந்தது, இதனால் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை இன்று 50 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

கடந்த வாரங்களில் ரூபாய் 350 வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காயின் விலை 400 விற்பனை செய்யப்படுகிறது, உருளை கடந்த வாரம் 35 ரூபாய் விற்பனை செய்த நிலையில் தற்போது 45 ரூபாய் விற்பனையாகிறது.

பீன்ஸ் கடந்த வாரம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 55 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது, பூண்டு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.380க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழையின் எதிரொலியாக முக்கியமான அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது, இந்த காய்கறி விலையேற்றம் அடுத்த இரண்டு நாள்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

மழையின் தாக்கம் குறைந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறி வரத்து அதிகரிக்கும் பொழுது காய்கறி விலைகள் குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.