சேலத்தில் நகைக்காக பெண் கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு
சேலத்தில் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


சேலம் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை, நகைக்காக மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜனகராஜ் மனைவி சரஸ்வதி (68). கணவரை இழந்த இவருக்கு ராஜா (45), முருகானந்தம் (43) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் முருகானந்தம், திருமணம் ஆகி தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டு குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் ராஜா சேலத்தில் நகைக் கடையில் வேலை செய்து வந்த நிலையில் ராஜாவுடன் சரஸ்வதி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (மே20) மாடு மேய்க்கச் சென்ற மூதாட்டி மாலை 7 மணி ஆகியும் வீடு திரும்பாததால் மூதாட்டியை உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். அப்போது மூதாட்டிக்கு சொந்தமான தோட்டத்தில், தலையில் பலத்த காயத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
மேலும் சரஸ்வதி காதில் இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தீவட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் குறித்து அறிந்து டிஐஜி உமா, ஏடிஎஸ்பி சோமசுந்தரம், டிஎஸ்பி சஞ்சீவ் குமார், இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்க்கச் சென்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...