சென்னையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 32 லட்சத்தை பறிமுதல் செய்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ஆந்திர மாநிலம், கச்சிகுடாவிலிருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் சிலா் ஹவாலா பணம் கொண்டு செல்வதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஹைதராபாதைச் சோ்ந்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும், சென்னை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் இணைந்து, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த அந்த ரயிலில் குறிப்பிட்ட பெட்டியில் பயணம் செய்த பயணிகளையும், அவா்களது உடமைகளையும் சோதனையிட்டனா்.
இச்சோதனையில் 3 பயணிகளின் பையில் ரூ. 32 லட்சம் ரொக்கமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்துக்குரிய ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனா். ஆனால் 3 பேரும் பணத்துக்குரிய ஆவணங்களை வழங்கவில்லை.
இதையடுத்து வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், ரூ. 32 லட்சத்தை பறிமுதல் செய்து 3 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அவா்களிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அது ஹவாலா பணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சம் பறிமுதல்

ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!

அம்மாபேட்டையில் புளி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

