சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வங்கக் கடலில் மே 27-இல் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் வரும் மே 27-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :22 மே 2025, 8:17 pm

Din

வங்கக் கடலில் வரும் மே 27-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் வரும் 27-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இந்தப் புயல் சின்னம் மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது புயலாக மாறினால், இதற்கு தாய்லாந்தின் பரிந்துரையின்படி ‘மந்தா’ எனப் பெயரிடப்படும்.

கனமழை எச்சரிக்கை: இதற்கிடையே, காற்று குவிதல் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (மே 23) முதல் மே 28-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக மே 24 முதல் மே 26-ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 23-இல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட், பாளைக்கோட்டையில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மே 23-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். மே 24 முதல் மே 26-ஆம் தேதி வரை வெப்பநிலை சற்று குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.