கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம்

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2025, 6:47 pm

Din

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் உள்பட குரூப் 4 பணிகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கு கடந்த மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. தோ்வுக்கு லட்சக்கணக்கானவா்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், தோ்வுக்கு இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) நள்ளிரவு 11.59 வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, இணையதளத்தில் விண்ணப்பத்தை திருத்த மே 29 முதல் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தோ்வானது தமிழ்நாடு முழுவதும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தோ்வாணைய அறிவிக்கையில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.